இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துடன் 'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
மார்வெல் சினிமா பிரபஞ்சத்தின் முன்னணி நட்சத்திரங்களான ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிறிஸ் எவன்ஸ், இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் 'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' படத்தின் புதிய இந்திய வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளனர். இந்தியாவில் மார்வெல் சூப்பர்ஹீரோ படங்களுக்கு இருக்கும் பிரம்மாண்ட வரவேற்பைக் கருத்தில் கொண்டு, சர்வதேச வெளியீட்டுக்கு முன்னதாகவே இந்தியாவில் படத்தை வெளியிட மார்வெல் ஸ்டுடியோஸ் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு மார்வெல் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜூனியரின் மறுவருகை உலகளவில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய ரசிகர்களுக்கான இந்த சிறப்புத் தேதி அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
· @xpresscinema