இந்தியாவில் 26 கோடி ரூபாய் வசூல்: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரீ-ரிலீஸ் பிரம்மாண்ட சாதனை

இந்தியாவில் 26 கோடி ரூபாய் வசூல்: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரீ-ரிலீஸ் பிரம்மாண்ட சாதனை

மார்வெல் சினிமா ரசிகர்களின் உற்சாக கொண்டாட்டத்துடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்' திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிசில் 26 கோடி ரூபாய் வசூலித்து அசத்தியுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் நடந்த இந்த மறுவெளியீட்டு வசூலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் திரையிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு இளைஞர்கள் மற்றும் மார்வெல் ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். பழைய நினைவுகளை மீண்டும் திரையரங்கில் பெரிய திரையில் பார்த்து கொண்டாடும் உணர்வை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடித் தீர்த்துள்ளனர். இந்த தொடர் வெற்றியைத் தொடர்ந்து, உலக சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம் வரும் டிசம்பர் 18 அன்று திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்த இந்த மறுவெளியீடு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்