அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்கோர் இப்போது ஜியோஹாட்ஸ்டாரில்: தமிழிலும் ஸ்ட்ரீமிங் தொடக்கம்!
மார்வெல் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் ஓடிடி அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்ட படைப்பான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்: என்கோர்' (Avengers Endgame: Encore) தற்போது ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. உலக சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்த இந்த மெகா திரைப்படத்தை, ரசிகர்கள் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் தற்போது கண்டுகளிக்க முடியும். தானோஸுக்கு எதிரான அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களின் இறுதிப் போர், அயர்ன் மேன் மற்றும் கேப்டன் அமெரிக்காவின் உணர்ச்சிமிக்க தருணங்கள் என மீண்டும் அந்தப் பிரம்மாண்ட உலகிற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் இந்தப் பதிப்பு வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள் பலரும், வார இறுதி நாட்களைக் கழிக்கவும் மார்வெல் நினைவுகளை மீண்டும் அசைபோடவும் இந்த என்கோர் பதிப்பை ஜியோஹாட்ஸ்டாரில் உடனே பார்க்கத் தொடங்கியுள்ளனர். மார்வெல் பிரியர்களுக்கு இது நிச்சயம் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்.
· Jiohotstar