ஆயுஷ்மான் குரானாவின் 'உட்தா தீர்': நேபாள தணிக்கை வாரியம் தடை விதித்ததால் பரபரப்பு!

ஆயுஷ்மான் குரானாவின் 'உட்தா தீர்': நேபாள தணிக்கை வாரியம் தடை விதித்ததால் பரபரப்பு!

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா மற்றும் சாரா அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள 'உட்தா தீர்' (Udta Teer) திரைப்படத்தை தங்கள் நாட்டில் திரையிட நேபாள மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பதற்றங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சினிமா எக்ஸ்பிரஸ் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. நேபாள நாட்டின் தேசிய சினிமா உற்பத்தி, கண்காட்சி மற்றும் விநியோகச் சட்டத்தின் பிரிவு 8(3)-ன் கீழ் இப்படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுடனான நட்புறவை பாதிக்கும் வகையிலோ அல்லது சர்வதேச உறவுகளில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலோ காட்சிகள் இருந்தால் திரையிட அனுமதிக்கப்படாது என்ற விதியின் அடிப்படையில் இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் இந்தியாவில் நினைவாற்றலை இழந்து குழப்பத்தில் சிக்கும் ஸ்பை காமெடி கதையாக இது உருவாகியிருந்தது. நேபாள தணிக்கை வாரியத்தின் இந்த திடீர் முடிவு இந்தி திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச வெளியீட்டிற்கு தயாராகி வரும் படக்குழு, இந்த தடையை நீக்க மறுஆய்வு முறையீடு செய்ய ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

· @xpresscinema

பழைய செய்திகள்