'பேச்சுலர் பார்ட்டி டியூக்ஸ்': மம்முவாக களமிறங்கும் சந்து சலீம்குமார்; அமல் நீரத் படத்தின் புதிய அப்டேட்!

'பேச்சுலர் பார்ட்டி டியூக்ஸ்': மம்முவாக களமிறங்கும் சந்து சலீம்குமார்; அமல் நீரத் படத்தின் புதிய அப்டேட்!

இயக்குநர் அமல் நீரத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் 'பேச்சுலர் பார்ட்டி டியூக்ஸ்' திரைப்படத்திலிருந்து நடிகர் சந்து சலீம்குமாரின் கதாபாத்திர போஸ்டரை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அவர் 'மம்மு' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள சந்து சலீம்குமார், இதில் வித்தியாசமான தோற்றத்தில் கவனத்தை ஈர்க்கிறார். அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லன், குஞ்சாக்கோ போபன், டொவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, நதியா மொய்து, ஜோதிர்மயி, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடிக்கிறது. உன்னி ஆர் கதையில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர், 2012 ஆம் ஆண்டில் வெளியான கல்ட் கிளாசிக் 'பேச்சுலர் பார்ட்டி'யின் அடுத்த அத்தியாயமாக அமைவதால் மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் சவுத் கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு கதாபாத்திர போஸ்டர்களையும் படக்குழுவினர் வெளியிட்டு வரும் நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள டீசர் மற்றும் பாடல்கள் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

· Sony Music South

பழைய செய்திகள்