நாளை வெளியாகிறது பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் 'பேச்சிலர் பார்ட்டி 2' ஃபர்ஸ்ட் லுக்!

நாளை வெளியாகிறது பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் 'பேச்சிலர் பார்ட்டி 2' ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் உருவாகி வரும் 'பேச்சிலர் பார்ட்டி 2' திரைப்படத்தின் எதிர்பார்ப்புக்குரிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று சோனி மியூசிக் சவுத் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. இப்படத்தில் நஸ்லென், குஞ்சாக்கோ போபன், டோவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், ஷரஃபுத்தீன், ஸ்ரீநாத் பாசி, ஷைன் டாம் சாக்கோ, நஸ்ரியா ஃபஹத், ரஜிஷா விஜயன், ஜோதிர்மயி உள்ளிட்ட பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசையமைக்க, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு நடிகருக்கும் உள்ள பிரத்யேக ரசிகர் பட்டாளம் இந்த படத்தின் அப்டேட்டுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. மலையாள சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு, இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Sony Music South

பழைய செய்திகள்