'பேச்சிலர் பார்ட்டி 2': 'டேனி' கதாபாத்திரத்தில் சௌபின் ஷாஹிர்... அமல் நீரத் படத்தின் மாஸ் போஸ்டர்!
மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பேச்சிலர் பார்ட்டி டியூக்ஸ்' (Bachelor Party DEUX) திரைப்படத்தில் நடிகர் சௌபின் ஷாஹிர் 'டேனி' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக சோனி மியூசிக் சவுத் நிறுவனம் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நஸ்ரியா ஃபஹத், நஸ்லென், குஞ்சாக்கோ போபன், டொவினோ தாமஸ், ஸ்ரீநாத் பாசி, ஷைன் டாம் சாக்கோ, நதியா மொய்து, ஜோதிர்மயி, ரஜிஷா விஜயன் என தென்னிந்திய சினிமாவின் பெரும் நட்சத்திரப் பட்டாளமே களம் இறங்குகிறது. இதில் சௌபின் ஷாஹிரின் 'டேனி' தோற்றம் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்று வருகிறது. உன்னி ஆர் திரைக்கதை அமைக்கும் இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். இசை உரிமத்தை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்தடுத்த கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Sony Music South