அமல் நீரத்தின் ‘பேச்சிலர் பார்ட்டி 2’: அதிரடியான தெலுங்கு ட்ரெய்லரை வெளியிட்ட சோனி மியூசிக்!

அமல் நீரத்தின் ‘பேச்சிலர் பார்ட்டி 2’: அதிரடியான தெலுங்கு ட்ரெய்லரை வெளியிட்ட சோனி மியூசிக்!

மலையாளத்தின் முன்னணி இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் உருவாகியுள்ள மல்டி ஸ்டாரர் திரைப்படமான ‘பேச்சிலர் பார்ட்டி 2’ (Bachelor Party D'eux) படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசை உரிமையைக் கொண்டுள்ள சோனி மியூசிக் சவுத் நிறுவனம் இந்த தெலுங்கு ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முன்னணி தயாரிப்பாளர் அன்வர் ரஷீத் மற்றும் நஸ்ரியா நசீம், ஜோதிர்மயி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், நஸ்லென், சௌபின் ஷாஹிர், ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாஸி, ஷரஃபுதீன், டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் மற்றும் டார்க் காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர், தெலுங்கு பேசும் சினிமா ரசிகர்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் சோனி மியூசிக் மூலம் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. அமல் நீரத்தின் தனித்துவமான மேக்கிங் பாணியில் திரைக்கு வரவிருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

· Sony Music South

பழைய செய்திகள்