கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் ராவடி: பேசில் ஜோசப் மற்றும் ஜாஃபர் சாதிக்கின் அதகள காமெடி

கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் ராவடி: பேசில் ஜோசப் மற்றும் ஜாஃபர் சாதிக்கின் அதகள காமெடி

தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி நகைச்சுவை பாணியை உருவாக்கியுள்ள பேசில் ஜோசப் நடிப்பில் உருவாகியுள்ள 'ராவடி' திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 'ஊரு சைடு பாய்ஸ் வராங்க, இனி குஜிலிமஸ்து தான்' என்ற உற்சாகமான முழக்கத்துடன் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பேசில் ஜோசப்புடன் இணைந்து அக்‌ஷய் குமார், ஜாஃபர் சாதிக், நோபல் ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், சாலேஸ்வரன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பல திறமையான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இன்றைய தலைமுறை இளைஞர்களின் கலாட்டாக்களையும் நகைச்சுவை கலந்த சுவாரசிய சம்பவங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் கலகலப்பான திரைக்கதையுடன் மிக சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 24 அன்று வெளியாகும் இப்படம், ரசிகர்களுக்கு திரையரங்குகளில் முழுநீள நகைச்சுவை பொழுதுபோக்கு அனுபவத்தைக் கொடுக்கும் என சினிமா ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· @tamilcinexpress

பழைய செய்திகள்