பாசிட்டிவ் எனர்ஜி அட்லீயிடம் கொட்டிக்கிடக்கு: 'பத்தா' வெற்றி விழாவில் பாலாஜி தரணிதரன் நெகிழ்ச்சி!
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ள 'பத்தா' திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குநர் பாலாஜி தரணிதரன், தயாரிப்பாளர் அட்லீ மற்றும் தனது படக்குழுவினர் குறித்து மனம் திறந்து பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதாக நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். விழாவில் பாலாஜி தரணிதரன் பேசுகையில், "என்னிடத்தில் இல்லாத பெரிய பாசிட்டிவ் எனர்ஜி அட்லீயிடம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. விஜய் சேதுபதி எப்போதுமே இயக்குநர்களின் விருப்பமான நடிகர். நான் அவரது நண்பர் என்பதற்காக அவர் இந்த கதையை ஒப்புக்கொள்ளவில்லை, கதையின் வலிமையை உணர்ந்தே நடித்தார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்புதான் லிஜோமோல் ஜோஸ் இணைந்தார். சிறுவன் சாய் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார். ஒட்டுமொத்த குழுவும் என் மீது வைத்த நம்பிக்கை என்னை இன்னும் அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வைத்தது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் ஒரு அழுத்தமான படைப்பைத் தந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் வெற்றி நடைபோடும் 'பத்தா' வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.
· Actor Kayal Devaraj