நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் பீஸ்ட் டிரெய்லர்: விஜய் ரசிகர்களுக்கு கவுண்டவுன்

நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் பீஸ்ட் டிரெய்லர்: விஜய் ரசிகர்களுக்கு கவுண்டவுன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்திருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் நினைவுபடுத்தியுள்ளது. இணையத்தில் விஜய் ரசிகர்கள் இப்போதே கவுண்டவுன் தொடங்கி கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். கையில் கனரக துப்பாக்கியுடன் தீவிரமான முகபாவனையுடன் விஜய் தோன்றும் இந்த கவுண்டவுன் போஸ்டர், டிரெய்லரில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை மாலை வெளியாகவுள்ள இந்த டிரெய்லர் யூடியூப் தளத்தில் பல முக்கிய சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் காண ரசிகர்கள் பெருமளவில் தயாராகி வருகின்றனர்.

· Sun Pictures

பழைய செய்திகள்