பீஸ்ட் அமெரிக்க முன்பதிவு $250K தாண்டியது: பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே பாக்கி

பீஸ்ட் அமெரிக்க முன்பதிவு $250K தாண்டியது: பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே பாக்கி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் அமெரிக்க முன்பதிவு விற்பனை 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களைத் தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்காவில் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் அஹிம்சா பிலிம்ஸ் இணைந்து படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகின்றன. அமெரிக்க சிறப்பு பிரீமியர் திரையிடலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் முன்பதிவு வேகமெடுத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு டிக்கெட் முன்பதிவு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான பெரும்பாலான இருக்கைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

· Hamsinient

பழைய செய்திகள்