அமெரிக்க முன்பதிவில் 1 லட்சம் டாலர்களை கடந்த பீஸ்ட்: ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் விஜய்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் அமெரிக்க முன்பதிவு விற்பனை ஒரு லட்சம் டாலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அமெரிக்காவில் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் அஹிம்சா பிலிம்ஸ் இணைந்து வெளியிடுகின்றன. ஏப்ரல் 12 அன்று அமெரிக்காவில் சிறப்பு பிரிமியர் காட்சிகள் தொடங்க உள்ள நிலையில், முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன. 'அரபிக் குத்து' பாடல் சர்வதேச அளவில் பெற்ற அதீத வரவேற்பு இந்த ஆரம்பக்கட்ட டிக்கெட் விற்பனைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அனிருத்தின் இசை மற்றும் நெல்சனின் ஆக்ஷன் நகைச்சுவை பாணி மீதான நம்பிக்கை காரணமாக அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் உற்சாகம் காணப்படுகிறது. வரும் நாட்களில் முன்பதிவு திரையரங்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
· Hamsinient