பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் ஹைந்தவா: மனதை வருடும் முதல் பாடல் எவரைனா வெளியானது!
பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் சம்யுக்தா மேனன் இணைந்து நடித்துள்ள புதிய பான்-இந்திய திரைப்படமான ஹைந்தவா (Haindava) படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எவரைனா (Evaraina) என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த மென்மையான காதல் பாடல், நிபந்தனையற்ற அன்பின் ஆழத்தைப் பேசும் விதமாக அமைந்துள்ளது. மகேஷ் சந்து தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் தசாவதாரக் கோயில் பின்னணியில் ஆன்மிகம் கலந்த மர்மங்களும் அதிரடி சாகசங்களும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன. ஆக்ஷன் நாயகனாக அறியப்பட்ட பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், இதில் உணர்வுப்பூர்வமான காதல் நாயகனாகவும் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பார்வை ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த முதல் பாடல் படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. ஹைந்தவா திரைப்படம் வரும் நவம்பர் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
· Ursvamsishekar