வெளியானது 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஓடிடி டிரெய்லர்: தமிழ் உள்பட 5 மொழிகளில் அக்டோபர் 2 ரிலீஸ்!

வெளியானது 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஓடிடி டிரெய்லர்: தமிழ் உள்பட 5 மொழிகளில் அக்டோபர் 2 ரிலீஸ்!

திரையரங்குகளில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி டிரெய்லரை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. நிவின் பாலி, மமிதா பைஜூ மற்றும் சங்கீத் பிரதாப் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் திலீஷ் போத்தன் வழங்கியுள்ள இந்த படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள கலகலப்பான குடும்பக் காட்சிகளும், நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவின் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரையரங்குகளில் பார்க்கத் தவறிய பலதரப்பட்ட மொழி ரசிகர்களுக்கும் இந்த ஓடிடி ரிலீஸ் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. விடுமுறை தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் ஒளிபரப்பாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

· Jiohotstar

பழைய செய்திகள்