புக்மைஷோவில் 65 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: 'பெத்லகேம் குடும்ப யூனிட்' புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை!
மலையாள திரையுலகில் வசூல் சாதனை புரிந்து வரும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தளமான புக்மைஷோவில் (BookMyShow) புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. இத்திரைப்படம் புக்மைஷோ தளத்தில் மட்டுமே இதுவரை 6.5 மில்லியனுக்கும் அதிகமான (65 லட்சம்) டிக்கெட்டுகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது என்று மலையாள சினிமா ட்ராக்கர்கள் பதிவிட்டுள்ளனர். குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சத்துடன் உருவான இத்திரைப்படம் வெளியான நாள் முதலே திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் நகைச்சுவையும் கலந்து சொன்ன விதம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. கேரளாவில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டிய இந்த திரைப்படம், தற்போது முன்னணி ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டாரிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. திரையரங்குகளில் பெற்ற பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஓடிடி தளத்திலும் இப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· MalayalamReview