காந்தா படத்திற்காக சிறந்த நடிகை விமர்சகர் விருது வென்றார் பாக்யஸ்ரீ போர்சே!

காந்தா படத்திற்காக சிறந்த நடிகை விமர்சகர் விருது வென்றார் பாக்யஸ்ரீ போர்சே!

துபாயில் நடைபெற்ற பிரம்மாண்ட 'சைமா 2026' விருது விழாவில் 'காந்தா' திரைப்படத்தில் வெளிப்படுத்திய அற்புதமான நடிப்பிற்காக நடிகை பாக்யஸ்ரீ போர்சே சிறந்த நடிகைக்கான (விமர்சகர் பிரிவு) விருதை வென்றுள்ளார். இந்த கவுரவமிக்க அங்கீகாரம் குறித்து சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர். துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான காந்தா திரைப்படத்தில் சவாலான வேடத்தை ஏற்று தனது யதார்த்தமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் பாக்யஸ்ரீ. அவரது நுணுக்கமான உணர்ச்சி வெளிப்பாடுகள் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து அவர் வெளிப்படுத்திய நடிப்பு பார்வையாளர்களைக் கவர்ந்தது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 'சேயோன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பாக்யஸ்ரீக்கு கிடைத்துள்ள இந்த விருது, அவரது திரைப்பயணத்தில் மேலும் பல உயரங்களைத் தொட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Prosathish

பழைய செய்திகள்