6 மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூபில் டிரெண்டிங்: 'ரியாலிட்டி' படத்தின் பஜ கோவிந்தம் பாடல் சாதனை!

6 மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூபில் டிரெண்டிங்: 'ரியாலிட்டி' படத்தின் பஜ கோவிந்தம் பாடல் சாதனை!

'ரியாலிட்டி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பஜ கோவிந்தம்' பாடல் யூடியூப் தளத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இமாலய சாதனை படைத்துள்ளதுடன், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. நடுத்தரக் குடும்பத்து உறவுகளின் ஆழமான பாசப்பிணைப்பை விவரிக்கும் இப்பாடலுக்கு பீம்ஸ் சிசிரோலியோ மனதை வருடும் இசையமைத்துள்ளார். சனாரே எழுதிய வரிகளுக்கு பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனது தனித்துவமான குரலில் ஆன்மார்த்தமாக உயிர் கொடுத்துள்ளார். இப்பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் 'ரியாலிட்டி' திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த மெகா ஹிட் பாடல் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்