இன்ஸ்டாகிராமில் 3-வது இடத்தில் டிரெண்டிங்: இணையத்தை அதிரவைக்கும் 'பஜ கோவிந்தம்' பாடல்!

இன்ஸ்டாகிராமில் 3-வது இடத்தில் டிரெண்டிங்: இணையத்தை அதிரவைக்கும் 'பஜ கோவிந்தம்' பாடல்!

'ரியாலிட்டி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பஜ கோவிந்தம்' பாடல் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம் மியூசிக் தளத்தில் இப்பாடல் தற்போது இந்திய அளவில் 3-வது இடத்தில் டிரெண்டாகி வருவதாக எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்டுள்ளது. துள்ளலான இசை மற்றும் எளிமையான வரிகளுடன் அமைந்துள்ள இந்த பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே இணையவாசிகளின் விருப்பமான பாடலாக மாறியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் போன்றவற்றில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். யூடியூப் தளத்திலும் இப்பாடல் தொடர்ந்து பல லட்சம் பார்வைகளைக் கடந்து முன்னேறி வருகிறது. பாடலுக்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பு, விரைவில் திரைக்கு வரவுள்ள 'ரியாலிட்டி' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்