‘பாரத வர்ஷா’ படத்தின் ‘அம்மா கதிலி வச்சே’ பாடல் அக்டோபர் 14 அன்று ரிலீஸ்: நவராத்திரி பக்தி கீதம்!
நவராத்திரி திருவிழாவைக் கொண்டாடும் வகையில், ‘பாரத வர்ஷா’ (Bharata Varsha) திரைப்படத்திலிருந்து பக்தி மணம் கமழும் ‘அம்மா கதிலி வச்சே’ (Amma Kadhili Vacche) பாடலின் லிரிக்கல் வீடியோ அக்டோபர் 14 ஆம் தேதி பிற்பகல் 3:52 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அன்னை பராசக்தியின் பெருமைகளைப் போற்றும் சக்திவாய்ந்த பக்திப் பாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. தாளக் கட்டுகளுடன் கூடிய கம்பீரமான இசையும், பக்தியை உணர்த்தும் வரிகளும் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. பண்டிகைக் காலத்தில் வெளிவரும் இந்தப் பாடல், பக்தியையும் இசையையும் ரசிக்கும் சினிமா ரசிகர்களுக்குச் சிறந்த கொண்டாட்ட விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘பாரத வர்ஷா’ திரைப்படத்தின் வரலாற்று மற்றும் பக்திப் பின்னணிக்கு இந்தப் பாடல் மிகப்பெரிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 14 அன்று பிற்பகல் 3:52 மணிக்கு வெளியாகும் லிரிக்கல் வீடியோவை வரவேற்க ரசிகர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar