நடிகர் பரத் நடிக்கும் புதிய படம்: இனிதே தொடங்கிய பூஜை விழா!
நடிகர் பரத் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை இன்று அக்டோபர் 21 அன்று இனிதே நடைபெற்றது. இப்படத்தை இயக்குநர் குரு எழுதி இயக்குகிறார். இப்படத்தில் பரத்துடன் இணைந்து மீனாட்சி, ஷிவேஷ் தாராஜ், ரக்ஷனா மற்றும் பிரபல மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திறமையான இளம் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் சுவாரசியமான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பூஜை நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு படத்திற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் முழுவீச்சில் தொடங்கவுள்ளது.
· @kollywoodscope