சர்வதேச படவிழாவில் பாரதிராஜாவின் 'புலவர்': கனடா ஐஎஃப்எஃப்ஏ 2026-ல் அதிகாரப்பூர்வ தேர்வு!

சர்வதேச படவிழாவில் பாரதிராஜாவின் 'புலவர்': கனடா ஐஎஃப்எஃப்ஏ 2026-ல் அதிகாரப்பூர்வ தேர்வு!

இயக்குனர் இமயம் பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'புலவர்' திரைப்படம் புகழ்பெற்ற கனடா ஐஎஃப்எஃப்ஏ (IFFA 2026) திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பெருமைக்குரிய செய்தியை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகின் தனித்துவமான படைப்பாகக் கருதப்படும் 'புலவர்' திரைப்படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ் கலைப் படைப்புகள் கவனம் பெற்று வரும் நிலையில், ஆல்பர்ட்டா இந்திய திரைப்பட விழாவில் 'புலவர்' தேர்வாகியுள்ளது படக்குழுவினருக்குக் கூடுதல் அங்கீகாரமாக அமைந்துள்ளது. பாரதிராஜாவின் அழுத்தமான நடிப்புக்கும் கதை சொல்லும் நேர்த்திக்கும் விழாக் குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சூப்பர் டாக்கீஸ் மற்றும் ஒயிட் நைட் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி முருகையா இசையமைத்துள்ளார். சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்று வரும் இப்படத்தின் தமிழக திரையரங்கு ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்