400க்கும் மேற்பட்ட திரையரங்குகள், 3000 காட்சிகள்: அமெரிக்காவில் பீம்லா நாயக் விஸ்வரூபம்!
பவன் கல்யாண் நடிப்பில் வெளிவரும் ‘பீம்லா நாயக்’ திரைப்படம் அமெரிக்காவில் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் 3,000க்கும் மேற்பட்ட பிரீமியர் காட்சிகளுடன் பிரம்மாண்டமாக திரையிடப்பட உள்ளதாக பிரைம் மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் திரைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 24 அன்று நடைபெறும் இந்த பிரீமியர் காட்சிகள் மூலம் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய வெளிநாட்டு வெளியீடுகளில் ஒன்றாக பீம்லா நாயக் இடம்பெறுகிறது. சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் அமெரிக்காவில் உள்ள ஆந்திரா மற்றும் தெலங்கானா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராணா டக்குபதியின் கம்பீரமான நடிப்பு மற்றும் பவன் கல்யாணின் மாஸ் கதாப்பாத்திரம் இணைந்து திரையில் மோதும் தருணத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
· Primemediaus