'போகி' படத்தின் 'எகிலிவரங்கா' பாடல் உருவான கதை: இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் பகிர்ந்த சுவாரசியங்கள்
நடிகர் சர்வானந்த் மற்றும் இயக்குநர் சம்பத் நந்தி கூட்டணியில் தீவிரமான ஆக்ஷன் கதைகளமாக உருவாகி வரும் திரைப்படம் 'போகி'. இப்படத்தின் முதல் தனிப்பாடலான 'எகிலிவரங்கா' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அந்த பாடல் உருவான விதம் குறித்த சிறப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இவ்வீடியோவில் இயக்குநர் சம்பத் நந்தி, இசையமைப்பாளர் பீம்ஸ் சிசிரோலியோ மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பாடலின் பின்னணியில் உள்ள உணர்வுகள் மற்றும் வரிகளின் ஆழம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளனர். கிராமத்துப் பின்னணியில் மண்வாசனையுடன் கூடிய மெலோடியாக இப்பாடலை செதுக்கிய விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஷர்வா சம்பத் பிளட்ஃபெஸ்ட் என்ற வாசகத்துடன் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் 'போகி', வரும் நவம்பர் 12, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆக்ஷன் காட்சிகளுக்கு இடையே இத்தகைய இனிமையான மெல்லிசை பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar