யூடியூபில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த 'போகி' படத்தின் முதல் பாடல் 'எகிலிவரங்கா'!
விறுவிறுப்பாக தயாராகி வரும் 'போகி' திரைப்படத்தின் முதல் பாடலான 'எகிலிவரங்கா' வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடல் யூடியூப் தளத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இசைப் பிரியர்களின் இதயங்களை வென்றுள்ளதாக செய்தி தொடர்பாளர் வம்சி ஷேகர் தெரிவித்துள்ளார். மெல்லிசையும் கிராமத்து மண்ணின் மணமும் கலந்த இந்த மெலடி பாடல், கேட்போரை உடனடியாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. வரிகளும் இசையமைப்பும் மனித உணர்வுகளைத் தொடும் விதத்தில் உள்ளதால் சமூக வலைத்தளங்களிலும் ரீல்ஸ் வடிவிலும் இப்பாடல் வேகமாக பரவி வருகிறது. முதல் பாடலுக்கே கிடைத்துள்ள இந்த அமோக வரவேற்பு படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar