பிகில் 200 கோடி வசூல் சாதனை: தொடர்ச்சியாக ஹாட்ரிக் அடித்த தளபதி விஜய்!
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான 'பிகில்' திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தமிழ் திரையுலக வரலாற்றிலேயே தொடர்ச்சியாக மூன்று முறை 200 கோடி ரூபாய் வசூல் படங்களைக் கொடுத்த முதல் நடிகர் என்ற தனித்துவமான பெருமையை விஜய் பெற்றுள்ளார். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய படங்கள் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து அசத்தின. தற்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான பிகில் திரைப்படமும் அதே சாதனையை நிகழ்த்தி பாக்ஸ் ஆபிஸ் மன்னன் விஜய் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்களும், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான காட்சிகளும் குடும்ப ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. சர்வதேச அளவிலும் தமிழக திரையரங்குகளிலும் பிகில் திரைப்படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
· Only Kollywood