தமிழகத்தில் 100 கோடி கிளப்பில் இணைந்த பிகில்: தளபதி விஜய்யின் தொடர் சாதனை!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த தளபதி விஜய்யின் 'பிகில்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் இலக்கைக் கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் தமிழக திரையரங்குகளில் தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களை 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்க வைத்த ஒரே தமிழ் கதாநாயகன் என்ற தனித்துவமான பெருமையை விஜய் அடைந்துள்ளார். மெர்சல், சர்கார் ஆகிய முந்தைய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படமும் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் வசூல் மழை பொழிந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட அனைத்து முக்கிய விநியோகப் பகுதிகளிலும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இப்படம் பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் உருவான பிகில், பெண்களுக்கான முக்கியத்துவத்தை உணர்த்திய விதத்தில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவெடுத்து அரங்கு நிறைந்த காட்சிகளாகத் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.
· Only Kollywood