நாளை தொடங்கும் பிகில் டிக்கெட் முன்பதிவு: அக்டோபர் 25 உலகமெங்கும் ரிலீஸ்

நாளை தொடங்கும் பிகில் டிக்கெட் முன்பதிவு: அக்டோபர் 25 உலகமெங்கும் ரிலீஸ்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ள தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது என்று தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் செய்திதாள் விளம்பரத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்டோபர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் உலகம் முழுவதும் பிகில் புயல் வீசத் தொடங்கும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். திரையரங்கு உரிமையாளர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பு காட்சிகளை திரையிட விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள இந்த பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா திரைப்படம், குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு நாளை தொடங்குவதால் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

· AGS Entertainment

பழைய செய்திகள்