4வது வாரத்தில் வெற்றிகரமாக பிகில்: உலகளவில் விஜய்யின் அதிகபட்ச வசூல் சாதனை!

4வது வாரத்தில் வெற்றிகரமாக பிகில்: உலகளவில் விஜய்யின் அதிகபட்ச வசூல் சாதனை!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'பிகில்' இன்று தனது 4வது வாரத் திரையரங்குப் பயணத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. உலகளவில் விஜய்யின் ஒட்டமொத்த சினிமா பயணத்திலேயே அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக பிகில் உருவெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ திரையுலக வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் இறுதியில் வெளியான இப்படம், தொடர் பண்டிகை விடுமுறை தினங்கள் மட்டுமின்றி சாதாரண வேலை நாட்களிலும் குடும்ப ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளை நிரப்பி வருகிறது. ராயப்பன் கதாப்பாத்திரத்தின் தனித்துவமான மேனரிசங்களும், ஏ.ஆர்.ரஹ்மானின் சிங்கப்பெண்ணே பாடலும் படத்தின் வெற்றியை அடுத்த உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. புதிய திரைப்படங்கள் திரைக்கு வந்த போதிலும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாட்டுத் திரைகளிலும் பிகில் படத்திற்கான பிரதான காட்சிகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தளபதி விஜய் தனது அசைக்க முடியாத பாக்ஸ் ஆபிஸ் பலத்தை மீண்டும் உலகளவில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

· Only Kollywood

பழைய செய்திகள்