வெளியான சில நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வைகள்: சாதனை படைத்த 'வெறித்தனம்' பாடல்!
விஜய் பாடி அட்லீ இயக்கத்தில் வெளிவந்துள்ள 'பிகில்' திரைப்படத்தின் 'வெறித்தனம்' லிரிக் வீடியோ வெளியான குறுகிய நேரத்திலேயே 10 லட்சம் ரியல் டைம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சோனி மியூசிக் நிறுவனம் இந்த தகவலை உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் வரிகளில் உருவான இந்த துள்ளலான பாடல், விஜய் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. மைக்கேல் ராயப்பன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ள காட்சிகளுடன் கூடிய இந்த லிரிக் வீடியோ யூடியூபில் ட்ரெண்டிங் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. விஜய்யின் எனர்ஜியான குரல் மற்றும் ரஹ்மானின் கிராமிய இசைக் கலவை இரண்டும் இணைந்து ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது என இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
· Sony Music South