வெற்றி நடிக்கும் பிளாக் கோல்ட்: நம்பிக்கை ஊட்டும் ரைஸ் அப் பாடல் லிரிக்கல் வீடியோ நாளை ரிலீஸ்
கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் வெற்றி நடிப்பில் உருவாகி வரும் 'பிளாக் கோல்ட்' திரைப்படத்தின் 'ரைஸ் அப்' என்ற எழுச்சியூட்டும் பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை வெளியாகவுள்ளது. தடைகளைத் தாண்டி கனவுகளை நோக்கி ஓடும் மனிதர்களின் குரலாக இப்பாடல் அமைந்திருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. தீரன் இயக்கத்தில் எம். மூர்த்தி தயாரிக்கும் இப்படத்தில் பிரியாலயா, அருள், அஜித் விக்னேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கவாஸ்கர் அவினாஷ் இசையமைப்பில், பாடலாசிரியர் மோகன் வரிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. முன்னணி பாடகர்களான சைந்தவி மற்றும் டி. சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளது இப்பாடலின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. லகரி மியூசிக் ஆடியோ உரிமம் பெற்றுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நம்பிக்கை இழக்காத மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பேசும் இந்த 'ரைஸ் அப்' பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
· Idiamondbabu