கோலாகல பூஜையுடன் தொடங்கியது 'பிளாக் நைட் பாய்ஸ்' திரைப்படம்: அமல் ஜித், பிரியங்கா இணையும் புதிய படைப்பு!
அருள் முருகன் பிக்சர் மற்றும் ட்ரீம் ரன்வே 26த் செஞ்சுரி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'பிளாக் நைட் பாய்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை நிகழ்வு திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் இனிதே நடைபெற்றது. இப்படத்தில் அமல் ஜித் மற்றும் பிரியங்கா ராஜுகுமாரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆடுகளம் நரேன், செம்பார் வி.முருகேசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். காதல் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இளைஞர்களைக் கவரும் வகையில் இப்படம் தயாராகிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜோசுவா ஸ்ரீதர் இசையமைக்க, மனோஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ராமமூர்த்தி மற்றும் கி.மணிகண்டன் வழங்கும் இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் முழுவீச்சில் நடைபெறவுள்ளது.
· Actor Kayal Devaraj