ரோஸ் வில்லாவுக்கு அழைக்கும் 'பௌமா': அதிதி பாலன், திலீஷ் போத்தன் நடிப்பில் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு!

ரோஸ் வில்லாவுக்கு அழைக்கும் 'பௌமா': அதிதி பாலன், திலீஷ் போத்தன் நடிப்பில் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு!

மலையாளத்தில் உருவாகியுள்ள புதிய மர்ம திரில்லர் திரைப்படமான பௌமா படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரை விநியோகஸ்தரான ஏபி இன்டர்நேஷனல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரோஸ் வில்லாவுக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம், வரும்போது பூக்களைக் கொண்டு வராதீர்கள், பிரார்த்தனைகளை ஏந்தி வாருங்கள் என்ற மிரட்டலான வாசகத்துடன் இந்த முன்னோட்டக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ரெஜின்ஸ் பாபு இயக்கியுள்ள இப்படத்தில் சாகர் சூர்யா, திலீஷ் போத்தன், வினீத் ஆகியோருடன் அருவி புகழ் நடிகை அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை அத்துஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள மர்மமான காட்சியமைப்புகளும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பௌமா திரைப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வரும் நவம்பர் 12 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. திரில்லர் பட விரும்பிகளுக்கு இது ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Apifilms

பழைய செய்திகள்