'பௌமா' படத்தின் மிரட்டலான க்ரைம் த்ரில்லர் போஸ்டர்: அதிதி பாலன் மற்றும் திலீஷ் போத்தன் கூட்டணி!

'பௌமா' படத்தின் மிரட்டலான க்ரைம் த்ரில்லர் போஸ்டர்: அதிதி பாலன் மற்றும் திலீஷ் போத்தன் கூட்டணி!

மலையாளம் மற்றும் தமிழ் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'பௌமா' (BOUMA) திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒவ்வொரு முகத்திற்குப் பின்னாலும் ஒரு ரகசியம் இருக்கிறது, ஒவ்வொரு ரகசியத்திற்குப் பின்னாலும் ஒரு குற்றம் இருக்கிறது" என்கிற அழுத்தமான வாசகத்துடன் இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம் தயாராகி வருகிறது. ரெஜின்ஸ் பாபு இயக்கும் இப்படத்தில் 'அருவி' புகழ் அதிதி பாலன், சாகர் சூர்யா, வினீத் மற்றும் பிரபல இயக்குனர் திலீஷ் போத்தன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். மனித மனங்களின் இருண்ட பக்கங்களையும் மர்மமான குற்றப் பின்னணியையும் பேசும் விறுவிறுப்பான கதையாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். சமீபத்திய மலையாள வெற்றிப் படங்களின் இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏட்டஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இத்திரைப்படம் திரில்லர் பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திறமையான நடிகர்கள் ஒன்றிணைந்துள்ளதால், திரையில் ஒரு தீவிரமான புலனாய்வு அனுபவத்தை எதிர்பார்க்கலாம் என்று கோலிவுட் மற்றும் மாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

· Idiamondbabu

பழைய செய்திகள்