கிளைமாக்ஸ் காட்சியில் உண்மையிலேயே அழுதுட்டேன்: 'பத்தா' வெற்றி விழாவில் சிறுவன் சாய் பிருத்விராஜ் நெகிழ்ச்சி!

கிளைமாக்ஸ் காட்சியில் உண்மையிலேயே அழுதுட்டேன்: 'பத்தா' வெற்றி விழாவில் சிறுவன் சாய் பிருத்விராஜ் நெகிழ்ச்சி!

பத்தா திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலங்கடித்த குழந்தை நட்சத்திரம் சாய் பிருத்விராஜ், படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு தனது முதல் பட அனுபவங்களை மழலை மாறாத குரலில் பகிர்ந்து கொண்டார். இதனை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேடையில் பேசிய சாய் பிருத்விராஜ், "இது எனது முதல் திரைப்படம் என்பதால் தொடக்கத்தில் பயமாகவும் அதேநேரம் மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த படத்திற்காக 60 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன், படக்குழுவினர் அனைவரும் என்னை ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்டனர். தொடக்கத்தில் விஜய் சேதுபதி சாருடன் நடிக்கப் பயமாக இருந்தது, ஆனால் அவர் எனக்கு மிகுந்த ஆதரவளித்து சுதந்திரமாக நடிக்க வைத்தார். அவருடன் நடித்த கிளைமாக்ஸ் காட்சியில் நான் உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன்" என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்தார். தயாரிப்பாளர் அட்லீ மற்றும் இயக்குநர் பாலாஜி தரணிதரன் தனக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிறுவன் சாய் பிருத்விராஜின் இந்த யதார்த்தமான பேச்சு அரங்கில் இருந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள இச்சிறுவனின் நடிப்பு தமிழ் சினிமாவில் நீண்ட காலம் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்