சிம்புதேவன் இயக்கத்தில் நவோரியா: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு!

சிம்புதேவன் இயக்கத்தில் நவோரியா: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு!

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நவோரியா (Navoria) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளதாக பிஆர்ஓ நிகில் முருகன் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்த படத்தின் அறிவிப்பிற்காக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். சிம்புதேவன் என்றாலே தனித்துவமான கற்பனை உலகமும், புதுமையான கதைக்களமும், நகைச்சுவையும் கலந்த வித்தியாசமான திரைக்கதைக்கு பெயர் பெற்றவர். இம்சை அரசன் 23-ம் புலிகேசி, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் போன்ற படங்களின் வரிசையில் நவோரியா உலகம் ரசிகர்களுக்கு ஒரு சுவாரசியமான திரை அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் நாளை நவம்பர் 18 புதன்கிழமை மாலை 4 மணிக்கு சமூக வலைதளங்களில் பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர். இரண்டு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இந்த போஸ்டரை வெளியிடுவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் எகிறியுள்ளது. படத்தின் முன்னணி நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கதைக்களம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் போஸ்டருடன் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Nikil Murukan

பழைய செய்திகள்