ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிட்டுக்குறிஞ்சி படக்குழு: நவம்பர் 27 இல் தியேட்டர் ரிலீஸ்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிட்டுக்குறிஞ்சி படக்குழு: நவம்பர் 27 இல் தியேட்டர் ரிலீஸ்

அறிமுக நடிகர் ரஜித் மற்றும் தீப்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள 'சிட்டுக்குறிஞ்சி' திரைப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூட் ஆனந்த் இயக்கத்தில் பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நக்‌ஷா சரண், ஜி.எம். குமார், சுஜாதா உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடித்துள்ளனர். மாறா இசையமைப்பில் உருவான பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மகேந்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கிராமிய மணமும் யதார்த்தமான காதலும் கலந்த ஒரு அழகான திரைக்கதையாக உருவாகியுள்ள 'சிட்டுக்குறிஞ்சி' திரைப்படம் வரும் நவம்பர் 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பாடல்கள் தந்த உற்சாகத்துடன் படத்தின் டிரெய்லர் மற்றும் அடுத்தகட்ட விளம்பரப் பணிகளை படக்குழுவினர் தற்போது மும்முரமாகத் தொடங்கியுள்ளனர்.

· Idiamondbabu

பழைய செய்திகள்