24 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகள்: சியான் 62 அறிவிப்பு வீடியோ டிரெண்டிங்!
இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் இணையும் 'சியான் 62' திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான 24 மணி நேரத்திற்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து யூடியூபில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது. தயாரிப்பாளர் ரியா ஷிபு இந்த சாதனையைப் பகிர்ந்துள்ளார். ஹெச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மிரட்டலான பின்னணி இசையுடன் வெளியான இந்த அறிவிப்பு வீடியோவில் விக்ரமின் புதிய தோற்றம் ரசிகர்களைப் பிரமிக்க வைத்துள்ளது. முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளைப் படக்குழு விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
· Riyashibu_