சியான் விக்ரம், ஆனந்த் சங்கர் கூட்டணியின் அதிரடிப் படம் 'பவர்ஹவுஸ்': மிரட்டலான புரோமோ வீடியோ வெளியீடு!

சியான் விக்ரம், ஆனந்த் சங்கர் கூட்டணியின் அதிரடிப் படம் 'பவர்ஹவுஸ்': மிரட்டலான புரோமோ வீடியோ வெளியீடு!

'இருமுகன்' திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் சியான் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணையும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு 'பவர்ஹவுஸ்' (PowerHouse) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அனல் பறக்கும் அறிமுக புரோமோ வீடியோ யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது. சியான் விக்ரமின் ஆக்ஷன் அவதாரங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில் இந்த பவர்ஹவுஸ் திரைப்படத்தில் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட, இதுவரை பார்த்திராத ஒரு அதிரடியான எனர்ஜி கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இயக்குநர் ஆனந்த் சங்கர் தெரிவித்துள்ளார். இருமுகன் திரைப்படத்தை விடவும் பல மடங்கு விறுவிறுப்பான கதையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், யூடியூபில் வெளியாகியுள்ள புரோமோ வீடியோ இணையத்தில் சியான் விக்ரம் ரசிகர்களைப் பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தடுத்த நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

· Nikil Murukan

பழைய செய்திகள்