ரசிகர்களின் பேராதரவு: தெலுங்கிலும் வசூல் வேட்டையாடும் 'வீர தீர சோரா'!
சியான் விக்ரம் நடிப்பில் வெளியான கிராமத்து ஆக்ஷன் திரைப்படமான 'வீர தீர சூரன்', தெலுங்கிலும் 'வீர தீர சோரா' என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வருகிறது. நேர்மறையான விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுகள் மின்னல் வேகத்தில் நிரம்பி வருகின்றன. இயக்குநர் எஸ்.யு. அருண்குமாரின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் விக்ரமின் அனல் பறக்கும் நடிப்பு தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ஹெச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த ரா ஆக்ஷன் திரைப்படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தொடர்ந்து காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
· Riyashibu_