சியான் விக்ரமின் 'வீர தீர சூரன்': விறுவிறுப்பான டீசரை வெளியிட்ட படக்குழு!
நடிகர் சியான் விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்துள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் அதிரடி டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ரியா ஷிபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த டீசரைப் பகிர்ந்துள்ளார். 'சித்தா' படப் புகழ் எஸ்.யு. அருண்குமார் இயக்கியுள்ள இப்படம் பழிவாங்கலை மையமாகக் கொண்ட அழுத்தமான ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ளது. இதில் விக்ரமுடன் துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹெச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ஷிபு தமீன்ஸ் மற்றும் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வைரலாகி வருகின்றன.
· Riyashibu_