விக்ரம் அருண்குமார் கூட்டணியில் 'வீர தீர சூரன்': பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

விக்ரம் அருண்குமார் கூட்டணியில் 'வீர தீர சூரன்': பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

சீயான் விக்ரம் மற்றும் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது என தயாரிப்பாளர் ரியா ஷிபு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். எச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்கக் கட்டப் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் திட்டமிடப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் படப்பிடிப்பு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த தயாரிப்பு குழுவினர், இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் வழக்கத்திற்கு மாறாக புதுமையான விறுவிறுப்பான கோணத்தில் இருக்கும் என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர். 'சித்தா' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு எஸ்.யு. அருண்குமார் இயக்கும் படம் என்பதாலும், விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மலையாள முன்னணி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இணைந்திருப்பதாலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

· Riyashibu_

பழைய செய்திகள்