40 ஆண்டுகால திரைப்பயணம்: மாற்றுத்திறனாளி சினிமா கலைஞர் அமுதன் காலமானார்

40 ஆண்டுகால திரைப்பயணம்: மாற்றுத்திறனாளி சினிமா கலைஞர் அமுதன் காலமானார்

ராஜபாளையத்தில் இருந்து சினிமா இயக்குனர் கனவோடு சென்னை வந்து 40 ஆண்டுகளாக கோலிவுட்டில் பல்வேறு கலைஞர்களுக்கு உதவியாக இருந்த மாற்றுத்திறனாளி திரைக்கலைஞர் அமுதன் உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் உள்ள அத்தனை சினிமா ஸ்டுடியோக்களிலும் தனது மூன்று சக்கர வண்டியில் வலம் வந்த அமுதனை அறியாத திரையுலக பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு அனைவராலும் அறியப்பட்டவர். ஆரம்ப காலத்தில் அஜித் குமார், விஜய் ஆகியோருக்கு கதைகள் கூறிய அனுபவம் கொண்ட இவர், பல புதிய கலைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து திரையுலகில் கைதூக்கி விட்டுள்ளார். சில படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவருக்கு திரையுலக நண்பர்கள் ஒன்று கூடி இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தினர். கடின உழைப்பும் சினிமா மீதான தணியாத காதலும் கொண்டு வாழ்ந்த அமுதனின் மறைவிற்கு திரையுலக நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் தங்களது நெகிழ்ச்சியான அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்