கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்திற்குப் புதிய இசையமைப்பாளர்: சரண் குமாரை அறிமுகப்படுத்திய படக்குழு!

கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்திற்குப் புதிய இசையமைப்பாளர்: சரண் குமாரை அறிமுகப்படுத்திய படக்குழு!

நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தின் புதிய இசையமைப்பாளராக சரண் குமார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். சினிமா ரசிகர்களின் பிளேலிஸ்ட்டை ஆளப்போகும் புதிய இசையமைப்பாளரை வரவேற்பதாகக் குறிப்பிட்டு, சினிமா பிரபலம் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில், முன்னணி இளம் நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சரண் குமார் இசை புதிய துள்ளலையும் புத்துணர்ச்சியையும் சேர்த்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இளமை ததும்பும் காதல் மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு இவர் அமைத்துள்ள பாடல்கள் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியீடாக உருவாகும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தாக வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படக்குழு விரைவில் முதல் சிங்கிள் பாடலை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் சினிமா ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்