கிறிஸ்மஸ் விருந்தாக வரும் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’: ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கொண்டாட்டத்தை உருவாக்க வருகிறது ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த சுவாரசியமான போஸ்டரை மக்கள் தொடர்பாளர் டயமண்ட் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாய் சேகர் படத்தை இயக்கிய கிஷோர் ராஜ்குமார் இப்படத்தை இயக்குகிறார். நாயகனாக வீர் நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அன்னா பென் கைகோர்த்துள்ளார். விதிமுறைகளை உடைக்கும் காதல் ஜோடியாக இவர்கள் தோன்றும் காட்சிகள் கலகலப்பான நகைச்சுவையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாய்ஸ் அண்ட் கெயின்ஸ் தயாரிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடும் இந்த படம் இளசுகளுக்கு உற்சாக விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பண்டிகை விடுமுறை தினத்தில் குடும்பத்துடன் திரையரங்குகளில் கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் தயாராகி வருகின்றனர்.
· Idiamondbabu