தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்திறப்பு விழா: திரையுலகினர் உருக்கமான அஞ்சலி!
தமிழ் சினிமாவில் எண்ணற்ற காலத்தால் அழியாத இனிமையான கானங்களை வழங்கிய மறைந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்திறப்பு விழா சென்னையில் திரையுலகினர் முன்னிலையில் உருக்கமாக நடைபெற்றது என மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, முன்னணி இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், வசந்த், மோகன் ராஜா உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் இசைக் கலைஞர்களும் நேரில் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் திரையுலகினர் தங்கள் ஆறுதலைத் தெரிவித்தனர். திரையுலகில் அவர் ஆற்றிய பணிகள் குறித்து பலரும் புகழ்ந்துரைத்தனர். தமிழ் திரையிசையின் கானா மற்றும் மெல்லிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்து பல தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்த தேவா அவர்களின் நினைவுகளையும் அரிய பங்களிப்பையும் திரையுலகப் பிரபலங்கள் இந்நிகழ்வில் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.
· Nikil Murukan