புக்கிங் வேட்டையில் 'காம்ரேட் கல்யாண்': ஒரே மணி நேரத்தில் 4,200க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை!

புக்கிங் வேட்டையில் 'காம்ரேட் கல்யாண்': ஒரே மணி நேரத்தில் 4,200க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை!

மக்களின் ஏகோபித்த பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வரும் 'காம்ரேட் கல்யாண்' திரைப்படம், புக்மைஷோ தளத்தில் மின்னல் வேக டிக்கெட் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 4,220க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக புக் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுடன் கூடிய விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் முன்னணி நடிகர்களின் ஆக்ரோஷமான நடிப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பாராட்டிப் பதிவிட்டு வருவதால், ஒவ்வொரு காட்சிக்கும் பார்வையாளர்களின் வருகை பல மடங்கு அதிகரித்து வருகிறது. திரையரங்குகளில் குடும்பங்களும் இளைஞர்களும் அதிக அளவில் படையெடுத்து வருவதால், வரும் வார இறுதி நாட்களிலும் காம்ரேட் கல்யாண் படத்தின் வசூல் புதிய உச்சங்களைத் தொடும் என்று பாக்ஸ் ஆபீஸ் வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். மௌத் டாக் எனப்படும் மக்களின் நேரடி பாராட்டு படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்