தியேட்டர்களில் சிரிப்பலை பிளாக்பஸ்டர்: நான்கே நாட்களில் பிரேக்-ஈவன் சாதனை செய்த காம்ரேட் கல்யாண்!
திரையரங்குகளில் நகைச்சுவை விருந்தாக வெளியாகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் 'காம்ரேட் கல்யாண்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் அதிரடி சாதனையைப் படைத்துள்ளது. திரைப்படம் வெளியான நான்கே நாட்களில் உலகளவில் முதலீடு செய்யப்பட்ட தொகையை முழுமையாகத் திரும்பப் பெற்று (Break-even) லாபப் பாதைக்குள் நுழைந்துள்ளதாக பிரபல திரைத்துறை செய்தித் தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் பேராதரவு இப்படத்திற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள டைமிங் காமெடிகளும், நடிகர்களின் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு ஈர்த்து வருவதால் அனைத்து மையங்களிலும் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடும் கதையம்சம் கொண்ட படங்கள் எப்போதுமே வெல்லும் என்பதை 'காம்ரேட் கல்யாண்' மீண்டும் நிரூபித்துள்ளது. வரும் வார இறுதி நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் புதிய உச்சங்களைத் தொடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணித்துள்ளன.
· Ursvamsishekar