காம்ரேட் கல்யாண் 3 நாட்களில் 19.8 கோடி வசூல்: திரையரங்குகளில் சிரிப்பு வெடி!
முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக வெளியாகி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வரும் 'காம்ரேட் கல்யாண்' திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 19.8 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளதாக மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். குடும்பப் பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்றுள்ள இப்படம், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திரையரங்குகளில் இடைவிடாது சிரிக்க வைத்து வருகிறது. கதைக்களத்தின் புதுமையும் நடிகர்களின் எதார்த்தமான நகைச்சுவை நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. வார இறுதி நாட்களில் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்குப் படையெடுத்ததால் வசூல் மளமளவென உயர்ந்தது. திரையரங்குகளில் மக்கள் சிரித்து மகிழும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வரும் வார நாட்களிலும் படத்தின் வசூல் மிக வலுவாக நீடிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் கணித்துள்ளனர்.
· Ursvamsishekar