'காம்ரேட் கல்யாண்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்: அக்டோபர் 9ல் ரிலீஸ்!

'காம்ரேட் கல்யாண்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்: அக்டோபர் 9ல் ரிலீஸ்!

அரசியல் நையாண்டியும் வயிறு குலுங்கும் நகைச்சுவையும் நிறைந்த 'காம்ரேட் கல்யாண்' (Comrade Kalyan) திரைப்படம் தணிக்கைக் குழுவிடமிருந்து யு/ஏ சான்றிதழைப் பெற்றுள்ளதாக சினிமா பிஆர்ஓ வம்சி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார். சிவப்பு கொடி அரசியல் பின்னணியில் கலகலப்பான நகைச்சுவை கலாட்டாக்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்குத் தணிக்கைக் குழு முழு ஒப்புதல் அளித்துப் பச்சைக் கொடி காட்டியுள்ளது. தேர்தல் அரசியல் சூழல்கள் மற்றும் அன்றாட சமூக நிகழ்வுகளை நையாண்டி செய்து குடும்பத்தோடு ரசிக்கும் விதமாக மிகச் சுவாரசியமான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று டோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. அனைத்து தணிக்கைப் பணிகளும் திருப்திகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 'காம்ரேட் கல்யாண்' திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்